லேபிள்கள்

9.12.15

புதிய தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் நாளை வெளியீடு: 19-ல் தொடங்கும் டிச.12-ல் தொடங்கவிருந்த தொலைதூரக் கல்வி தேர்வுகள் - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

டிசம்பர் 12-ம் தேதி தொடங்கவிருந்த தொலைதூரக்கல்வி தேர்வுகள் 19-ம் தேதி தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தின் இளங்கலை, முதுகலை தேர்வுகள், தொழில்சார் படிப்பு தேர்வுகள், பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் தேர்வுகள் டிசம்பர் 12-ம் தேதி தொடங்கவிருந்தன. இந்த தேர்வு கள் அனைத்தும் 19-ம் தேதி தொடங்கும். தேர்வுகள் வார இறுதி நாட்களில் அதாவது சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நடைபெறும்.திருத்தப்பட்ட புதிய தேர்வுக் கால அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) 10-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக இந்த இணையதளத்தில் இருந்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக