லேபிள்கள்

8.12.15

பல்வேறு தேர்வுகள் தள்ளிவைப்பு!

 கனமழை காரணமாக அண்ணா பல்கலை, சட்டப்பல்கலை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் வெளியிட்ட அறிவிப்பில், 'அண்ணா பல்கலையின் தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளைத் தவிர, இணைப்பு கல்லுாரிகளில் வரும், 14ம் தேதி வரை, திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.


சட்ட பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி வெளியிட்ட அறிவிப்பில், 'அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், 13ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நகர மற்றும் ஊரமைப்புத் துறையில் உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, 13ம் தேதி எழுத்துத் தேர்வு, சென்னை மையத்தில் ஆன் - லைன் தேர்வாக நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெள்ளப்பெருக்கு காரணமாக, தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு நடத்தவிருந்த, கணித ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் மட்டும் டிச., 6ம் தேதி நடக்கவில்லை. இந்தத் தேர்வு, 20ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக