லேபிள்கள்

7.1.16

13,000 ஊழியர்கள் இன்று விடுப்பு

தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்துவதால்,
வெள்ள நிவாரணம் உள்ளிட்ட வருவாய் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.'வருவாய் துறையில் காலியாக உள்ள, 7,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்;ஊதிய குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும்;தேர்தல் பிரிவு தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.


அரசு பேச்சு நடத்தி, கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, ஓராண்டு ஆகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த சங்கத்தினர், தமிழகம் முழுவதும், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக