லேபிள்கள்

8.1.16

தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை:மத்திய இணை அமைச்சர் தகவல்

தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக, மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கேத்ரியா தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருவதில் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். 


தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்விப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களை இதிலிருந்து விடுவிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக