தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வரும் பிப். 8-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறியதாவது: மாவட்டத்தில் வரும் 2016, மார்ச் 4-ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை அரசு மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 12,685 மாணவ, மாணவிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 2,167 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 14,852 பேர் எழுதுகின்றனர்.
பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கேட்டல் மற்றும் பேசுதல் திறன் தேர்வு வரும் பிப்.5 மற்றும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் பிப்.8 முதல் 13-ஆம் தேதி வரையும், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் பிப்.15 முதல் 20 வரையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறவுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக