லேபிள்கள்

3.1.16

செய்முறை தேர்வை ஒத்தி வைத்தால் தேர்ச்சி அதிகரிக்கும்

பிளஸ் 2 தேர்வு முடிந்த பின், விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, 15 நாள் வரை ஆசிரியர்களுக்கு இடைவெளி கிடைக்கிறது. அந்த இடைவெளியில்,
நடப்பு கல்வியாண்டுக்கான செய்முறை தேர்வை ஒத்தி வைக்கும் பட்சத்தில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகஆசிரியர்கள்தெரிவித்தனர்.


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்னதாக, பிப்ரவரி முதல்வாரத்தில் துவங்கி, நான்காவது வாரம் வரை, செய்முறை தேர்வு நடத்தப்படும்.நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், 'ரிவிஷன்' செய்வதற்கான கால அவகாசம் மாணவர்களுக்கு இல்லை. இதனால், அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் என ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.நன்மைகள் பிளஸ் 2 வகுப்பின் முதன்மை தேர்வுகள், மார்ச், 23 தேதிக்குள் முடிந்துவிடுகின்றன. அதன் பின், முதுநிலை ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் மதிப்பீட்டு முகாம், ஏப்ரல் மூன்றாம்வாரத்தில்தான்நடத்தப்படுகிறது. இந்த இடைவெளியில், பிளஸ் 2 செய்முறை தேர்வுகளைநடத்துவதன் மூலம், மாணவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன், தேர்ச்சி விகிதமும்அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:பதற்றம் பொதுத்தேர்வுக்கு தயராகும் பதற்றத்தில் மாணவன் உள்ள சமயத்தில் செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், அவனது கவனம் இரண்டும் கெட்டானாய் அலைபாயும். அதிலும், நடப்பு கல்வியாண்டில், ரிவிஷன் செய்ய நேரம் இல்லாததால், செய்முறை தேர்வின் போது, பதற்றம் அதிகரிக்கும்.இதை தவிர்க்க, எழுத்துத்தேர்வு முடிந்த பின், மார்ச் 25ம் தேதிமுதல், ஏப்ரல், 10ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தலாம்.


இதன்மூலம், பிப்ரவரி மாதம் முழுவதும் ரிவிஷன் செய்ய முடியும். மேலும்செய்முறை தேர்வு மதிப்பெண் குறைத்துவிடுவர் என்ற பயத்தில், மாணவர்கள், சிறப்பு வகுப்புகளுக்கும், ரிவிஷன் வகுப்புகளுக்கும் தவறாமல் வர வாய்ப்புள்ளது.விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு, 15 நாள் இடைவெளி உள்ளதால்,அப்பணிகளும் செய்முறை தேர்வினை ஒத்தி வைப்பதால் பாதிக்கப்படாது. செய்முறை தேர்வினை, பொதுத்தேர்வுக்கு பின் நடத்துவதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கண்டிப்பாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக