லேபிள்கள்

17.3.16

சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை மத்திய அரசு முடிவு.

சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம்
குறித்துவிசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மிகவும் கடினம்சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவ–மாணவிகள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். 


கடந்த 15–ந்தேதி கணக்கு தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.இதில் கேட்கப்பட்டிருந்த 80 சதவீத கேள்விகள் பாடத்திட்டத்தின் வெளியில் இருந்து கேட்கப்பட்டதாகவும், நன்றாக படிக்கும் மாணவ–மாணவிகளால் கூட இந்த கேள்விகளுக்கு விடையளிக்க இயலவில்லை எனவும் செய்திகள் வெளியானது. வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தையும் குறித்த நேரத்தில் எழுதி முடிக்க இயலவில்லை என மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

வாட்ஸ் அப்பில் வெளியானது

இதற்கிடையே இந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்த சில கேள்விகள் பாட்னா மண்டலத்தின் சில பகுதிகளில் கடந்த 14–ந்தேதியே வாட்ஸ்அப்பில் வெளியானதாக கூறப்படுகிறது. தேர்வுக் கூடத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளும், ஏற்கனவே வாட்ஸ்அப்பில் வந்திருந்த கேள்வித்தாளும் ஒரே மாதிரி இருந்தது கண்டு மாணவ–மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கடினமான வினாத்தாள் மற்றும் அது வாட்ஸ் அப்பில் வெளியானது போன்ற காரணங்களால், கணக்கு பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகளும், பெற்றோரும் கண்ணீர் மல்க கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது.

உறுப்பினர்கள் கோரிக்கை

இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பூஜ்ஜிய நேரத்தில் இந்த பிரச்சினையை எழுப்பினர். இது குறித்து புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், நடந்து முடிந்த கணக்கு தேர்வை ரத்து செய்து விட்டு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் மற்றும் பா.ஜனதா உறுப்பினர் ரமேஷ் பிதுரி ஆகியோர், இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

விசாரணைக்கு ஏற்றது

இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, ‘இந்த விவகாரத்தில் 2 பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, சில கேள்விகள் கடினமானதாக இருந்தன. நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களால் கூட அதற்கு விடை எழுத முடியவில்லை என்பது. மற்றொன்று இந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்த சில கேள்விகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த விவகாரம் விசாரணைக்கு ஏற்றதுதான்’ என்று கூறினார்.இது மாணவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் பற்றிய விவகாரம் என்று கூறிய வெங்கையா நாயுடு, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த பிரச்சினையை மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக