பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடம் குறித்த அரசாணை: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடப் பரப்பளவு குறித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுத்து 2004-ஆம் ஆண்டு ஜூலை 21-இல் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இதில், மாநகராட்சி, மாவட்ட தலைநகரம், நகராட்சி, பேரூராட்சி, கிராமம் என 5 வகைகளாகப் பிரித்து, அதற்கு உள்பட்ட இடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இட பரப்பளவு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதை எதிர்த்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சங்கர மெட்ரிகுலேசன் பள்ளி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசாணை நடைமுறையில் இருக்கும்போது, மனுதாரர் பள்ளியை நடத்துவதற்காக 3 மாடி கட்டடத்தைக் கட்டியுள்ளார். கட்டி முடித்த பிறகே அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். இதுதவிர, அரசாணையில் தலையிடுவதற்கான காரணங்கள் இல்லை. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறதுஎன்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக