சென்னை: பிளஸ் 2 தேர்வில் இடம் பெற்ற கேள்விகளில் ஒரு கேள்வியில் பிழையான குறியீடு அச்சிட்டு இருந்ததால்
மாணவர்கள் பதில் அளிக்க முடியவில்லை. பிழையான அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடந்த 14ம் தேதி நடந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் சில, பாடப்பகுதியின் இறுதியில் இடம் பெறும் பயிற்சி வினாவில் இருந்து கேட்காமல் பாடப்பகுதியில் இருந்தே கேட்கப்பட்டன. அதே போல 5 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் 3 கேள்விகள் பாடத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. அது போலவே 64 வது கேள்வியும் கடினமாக இருந்தது. இதனால் பதில் எழுத மாணவர்கள் சிரமப்பட்டனர்.
மேலும், 70வது கேள்வியில் 2 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அவை சாய்ஸ் என்ற அடிப்படையில் அமைந்த கேள்விகள். இரண்டில் ஏதாவது ஒன்றை எழுதினால் போதும். முதல் கேள்வி அ, ஆ என இரு பிரிவாகவும், இரண்டாவது கேள்வி இ,ஈ என இரு பிரிவாகவும் கேட்கப்பட்டிருந்தன.
முதல் ேகள்வியில் ‘ஆ’ பிரிவு கேள்வியில் வேதி வினை குறித்து கேட்கப்பட்டு இருந்தது. அதில் தொகுதி 11(பதினொன்று) என்பதற்கு பதிலாக தொகுதி-2 என(ரோமன் குறியீடு) கொடுக்கப்பட்டு இருந்தது. தொகுதி 11(பதினொன்று) என்பது காப்பர்(தாமிரம்) குறிக்கும்.
தொகுதி 2(ரோமன் எண்) என்பது கால்சியத்தை(சுண்ணாம்பு) குறிக்கும். இந்த கேள்வியில் கேட்கப்பட்ட வேதி வினை என்பது தாமிரத்துடனா அல்லது சுண்ணாம்புடனா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் வேதிவினை மாற்றம் குறித்து எழுத முடியாமல் திணறினர். எனவே இந்த கேள்விக்கு பதில் எழுத முயற்சி செய்திருந்தால் முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்வுத்துறைக்கும் இது குறித்து மனு கொடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக