லேபிள்கள்

14.3.16

கல்வி உரிமைச் சட்டத்தில் தவறான தகவல்: ராமதாஸ் கண்டனம்

கல்வி உரிமைச் சட்டப்படி, மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு தவறான தகவல்களை வெளியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 2014-15-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை மாநிலங்கள் வாரியாக குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் செய்யப்பட்டு வரும் கல்வி உரிமைச் சட்ட வள மையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் 37.75 இடங்கள் நிரப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
தமிழக அரசின் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரத்தில் 94 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இப்படித் தவறான தகவல் அளிப்பதற்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக