லேபிள்கள்

4.4.16

தேர்வு முடிந்த இரு நாளில் 100 மாணவியர் ஓட்டம்

  தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, ஏப்., 1ம் தேதி மதியம், 1:00 மணிக்கு முடிந்தது. தேர்வு முடிந்தது முதல், நேற்று மதியம் 1:00 மணி வரை, 100 மாணவியர் மாயமாகி இருப்பதாக, போலீசுக்கு தகவல் வந்துள்ளது. திருப்பூரில் மட்டும், 21 மாணவியர் மாயமாகி உள்ளனர்.
 
              பேருந்து, ரயில் நிலையங்களில், கண்காணிப்பு பணிகளை, போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில், மாணவியரின் வருகை குறித்து, அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

            டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது: கடந்த, 2015ம் ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிந்ததும், 30 மாணவர்கள் தற்கொலை செய்தனர்; 125 பேர் ஓட்டம் பிடித்தனர். நடப்பாண்டில், தேர்வு முடிந்த, 48 மணி நேரத்தில், 100 மாணவியர் ஓட்டம் பிடித்துள்ளனர். மாயமான மாணவியரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக