பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி
செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடி வடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங் கியது. தமிழகம் முழுவதும் 64 மையங்களில் பிளஸ்-2 விடைத் தாள்கள் திருத்தப்பட்டு வருகின் றன. பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்படும் வினாக்களுக்கு கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பிளஸ்-2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தை விட்டு வெளியே கேட்கப்பட்டிருந்த இரு வினாக் களுக்கு 6 கருணை மதிப்பெண் அளிக்க அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
தவறான கேள்வி
கணித தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் சில வினாக்கள் தவறாக கேட்கப் பட்டிருந்ததாகவும் தேர்வெழுதிய மாணவர்கள் புகார் தெரிவித் திருந்தனர்.குறிப்பாக 6 மதிப்பெண் வினா பகுதியில் (தமிழ்வழி) வினா எண் 43-ல் கேட்கப்பட்டிருந்த கேள்வியின் நடுவில் “கோடானது” என்ற வார்த்தை குறிப்பிடப்படாத தால் அந்த கேள்வியே அர்த்த மில்லாத கேள்வியாகிவிட்டது. அதே கேள்விக்கு ஆங்கிலத்தில் சரியான வார்த்தை (Line) குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, தமிழ்வழியில் தவறாக கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு உரிய மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறையிடம் கணித ஆசிரியர்கள் முறையிட்டிருந்தனர். இதுதொடர்பாக மூத்த ஆசிரியர் களைக் கொண்டு ஆய்வு செய்யப் பட்டது. அதில், சர்ச்சைக்குரிய வினா தவறாக கேட்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
6 கருணை மதிப்பெண்
இந்த நிலையில் தமிழ்வழி வினா எண் 43-ல் கேட்கப்பட்டி ருந்த கேள்விக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந் தாலே 6 கருணை மதிப்பெண் வழங்க விடைத்தாள்களைதிருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை அதிகாரிகள் அறிவுறுத் தியுள்ளனர். அதன்படி, அந்த வினா வுக்கு விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் 6 கருணை மதிப்பெண் வழங்கப்படும். இதே வினா ஆங்கிலத்தில் சரியாக கேட்கப்பட்டிருப்பதால் ஆங்கில வழி வினாத்தாளுக்கு கருணை மதிப்பெண் உத்தரவு பொருந்தாது.
கட் ஆப் மார்க் அதிகரிக்கும்
கணித தேர்வு கடினமாக இருந்த தால் சென்டம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் ணும் குறையும் என்று கணித ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தி ருந்தனர். தற்போது, கணித தேர்வில் தவறான கேள்விக்கு 6 கருணை மதிப்பெண் அளிக்கப் பட்டிருப்பதால் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அத்துடன், கணிதத் தில் தேர்ச்சி வீதமும் அதிகரிக் கும்.பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்களும், கிராமப்புற பள்ளிமாணவர்களும் தமிழ்வழியில்தான் பிளஸ்-2 தேர்வை எழுதுவது வழக்கம். எனவே, 6 கருணை மதிப்பெண் என்ற அரசு தேர்வுத் துறையின் அறிவிப்பால் இத்தகைய அரசு பள்ளி மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் பெரிதும் பயன் அடைவர். வேதியியலை தொடர்ந்து கணித தேர்வுக்கும் 6 கருணை மதிப்பெண் அளிக்கப் பட்டிருப்பதால், பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக