தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் எஸ்.எஸ்.திலகர் சென்னையில், நேற்று கூறியதாவது:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், தமிழகத்தில், ஒரு தனியார் பல்கலைக் கழகம் உட்பட, 13 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
அவற்றில், அரசு நிறுவனங்களில் இரண்டாவது இடத்தை, தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.மத்திய அரசு, முதன்முறையாக வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், தேசிய அளவில், 36வது இடத்தை பிடித்திருப்பது, இப்பல்கலைக் கழகத்தின் தரத்துக்கு சான்று. இந்தாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம், ஜூன் முதல் வாரத்தில் துவங்கி, ஒரு மாத காலம் வரை, 'ஆன்லைனில்' கிடைக்கும்.
இந்தாண்டு முதல், புதுக்கோட்டை மண்டல ஆய்வு மையத்தில்,பாலிடெக்னிக் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. கறவை மாடு, ஆடு, பசு, கோழி, பன்றி, வான் கோழி வளர்ப்பு முறை பற்றிய, ஓராண்டு டிப்ளமோ படிப்பு, அங்கு பயிற்றுவிக்கப்படும். அதற்கான மாணவர் சேர்க்கை, ஆகஸ்டில் துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பல்கலைக் கழக பதிவாளர் டி.ஜே.ஹரிகிருஷ்ணன், உடன் இருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக