தொழிலாளர்கள் மத்தியில் புகைச்சல் கிளம்புவதையடுத்து, பி.எப்., புதிய நடைமுறையை வாபஸ் பெற வேண்டும்' என்ற கோரிக்கை, திருப்பூர் தொழில் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
உலகளாவிய ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வாயிலாக, ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி, உள்நாட்டு வர்த்தகம் வாயிலாக, ரூ.10 ஆயிரம் ÷காடி ஈட்டுகிறது, திருப்பூர். ஆடை உற்பத்தி நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர்கள், நான்கு லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; அதிக ÷வலை வாய்ப்பு உள்ளதால், வந்தோரை வாழவைக்கும் நகர் என்கிற சிறப்பு பெயரும் பெற்றுள்ளது.
சம்பளம் மட்டுமின்றி, எதிர்கால தேவையை நிறைவேற்றுவதற்கான சலுகைகளை எதிர்பார்த்தே, தொழிலாளர்கள் பணியில் சேர்கின்றனர். அரசு விதிமுறைப்படி, ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு பி.எப்., கணக்கு துவங்கியுள்ளன.பல்வேறு சூழல்களில் பணியில் இருந்து விலகும்போது, தொழிலாளர்களுக்கு, பி.எப்., தொகை முழுமையாக பெற்றுத்தரப்படும். பி.எப்., கணக்கில் உள்ள தொழிலாளர் பங்களிப்பு தொகையை மட்டுமே தொழிலாளர்கள் பெற முடியும்;
58 வயதுக்கு பின்னரே, நிறுவன பங்களிப்பு தொகையை பெற முடியும் என, மத்திய தொழிலாளர் துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, திருப்பூர் தொழில் துறையினர் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அனுப்பர்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில், ஒரிசா தொழிலாளர்கள், 500 பேர், பி.எப்., தொகையை முழுமையாக பெற்றுத்தரக்கோரி, போராட்டம் நடத்தினர். தொடர்ச்சியாக, பல நிறுவனங்களில், புதிய பி.எப்., நடைமுறையால் தொழிலாளர்கள் மத்தியில், புகைச்சல் கிளம்பி வருகிறது.பி.எப்., திட்டத்தில் மாறுதல் செய்து அறிவிப்பு வந்ததும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், புதிய நடைமுறையை மாற்றக்கோரி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியது.
நாளுக்குநாள் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதால், நிறுவனங்கள் தொழிலாளர்களை இழக்கும் அபாயம் உள்ளது.குறித்த நேரத்தில் ஆடைகளை தயாரித்து அனுப்ப, போதுமான தொழிலாளர் இருப்பது அவசியம். ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையால் தவிக்கும் சூழலில், குறைந்தபட்ச தொழிலாளர்களையும் இழந்தால், ஒட்டுமொத்த தொழில் துறை ஸ்தம்பிக்கும்.அதனால், ஏற்றுமதியாளர்கள் சங்கம், மீண்டும் ஒருமுறை மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் பண்டாரு தாத்ரேயா, அந்த துறை செயலர் சங்கர் அகர்வால் ஆகியோரிடம், புதிய பி.எப்., நடைமுறையை வாபஸ் பெற கோரிக்கை விடுத்தது.
நேற்று கோவை வந்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் சந்தித்தார்; அவரிடமும், இக்கோரிக்கையை முன்வைத்தார்.சக்திவேல் கூறுகையில், ""பி.எப்., நடைமுறை மாற்றத்தால், திருப்பூரில், தொழிலாளர் மத்தியில் பிரச்னைகள் உருவாகி வருகின்றன. தொழிலாளர்கள் பணியில் இருந்து விலகும் அபாயம் உள்ளதால், ஒட்டுமொத்த தொழில்துறையும் பாதிக்கப்படும். தொழிலாளர் துறை அமைச்சரிடம், பி.எப்., புதிய நடைமுறைகளை வாபஸ் பெற, ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து, கோரிக் கையை முன்வைத்தோம்; தொழிலாளர் துறை அமைச்சரிடம் பேசி, நல்ல முடிவு எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்,'' என்றார்.
பி.எப்., நடைமுறை மாற்றத்தால், திருப்பூரில், தொழிலாளர் மத்தியில் பிரச்னைகள் உருவாகி வருகின்றன. தொழிலாளர்கள் பணியில் இருந்து விலகும் அபாயம் உள்ளதால், ஒட்டுமொத்த தொழில்துறையும் பாதிக்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக