லேபிள்கள்

7.4.16

மத்திய பல்கலை நுழைவுத்தேர்வு ஏப்., 15 வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான, நுழைவுத் தேர்வுக்கு, ஏப்., 15ம் தேதியுடன்,'ஆன்லைன்' பதிவு
முடிகிறது.தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஜம்மு - காஷ்மீர்உட்பட, ஒன்பது மாநிலங்களில், மத்திய மனிதவள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன.


இந்த பல்கலைகளில், 3,000 இடங்களில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.குறைந்த கட்டணத்தில், விடுதி வசதி கொண்ட இந்த படிப்புகளில் சேர, பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு மே, 21, 22ல் நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மார்ச், 14ல் துவங்கியது. ஏப்., 15 வரை பதிவு செய்யலாம். தேர்வு முடிவுகள், ஜூன், 17ல் வெளியிடப்படும். இதுகுறித்த விவரங்களை, http://cucet16.co.in/WebPage/Home.aspx என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக