லேபிள்கள்

5.4.16

15–ந்தேதிக்குள் மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நாடு முழுவதும் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். இந்த ஊழியர்கள் அனைவரும் லோக்பால்
சட்டத்தின் கீழ் தங்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி கடந்த 2014 மற்றும் 2015–ம் ஆண்டுகளில் தங்களின் சொத்து விவரம், துணை (கணவன் அல்லது மனைவி) மற்றும் குழந்தைகளின் சொத்துக்கணக்கை 15–ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் 2016–ம் ஆண்டுக்கான சொத்து கணக்கு ஜூலை 31–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
இவ்வாறு தாக்கல் செய்யும் பட்டியலில் ஊழியர்களின் வெளிநாட்டு வங்கி கணக்கு, விலை உயர்ந்த ஓவியங்கள், மரச்சாமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், அசையும் சொத்துகள், இன்சூரன்ஸ் ஆவணங்கள், பங்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இடம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கையிருப்பு தொகை, வங்கி கணக்கு விவரம், முதலீடுகள், கடன் பத்திரம், வருங்கால வைப்பு நிதி, தனிநபர் கடன் உள்ளிட்ட விவரங்களையும் தொழிலாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இத்தகைய சொத்து கணக்கை தாக்கல் செய்ய வலியுறுத்துமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் சமீபத்தில் கடிதம் அனுப்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக