பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் 10 மதிப்பெண் பகுதியில் 'சமன்பாட்டை தீர்க்க' வினா தவறாக கேட்கப்பட்டதால்,
அக்கேள்விக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.மாணவர்கள், ஆசிரியர் கூறியதாவது:
கே.கே.விஷால், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: கேள்விகள் எளிதாக சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாவில் 'பிராபபிளிட்டி', இரண்டு மதிப்பெண்வினாவில் 'மாட்ரிக்ஸ்' கேள்விகள் சிந்தித்து எழுதுவதாக அமைந்தது. மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தது.எஸ்.நந்தினி, ஓ.சி.பி.எம்., மேல்நிலைப் பள்ளி, மதுரை: எல்லா கேள்விகளும் புத்தகத்தின் பின்னால் இருந்து கேட்கப்பட்டதால் மதிப்பெண் பெறுவது எளிது. அரசின் 'ப்ளூ பிரின்ட்' வினாவில் கேட்கப்பட்ட கேள்விகளாக இருந்தன. ஆண்டு கேள்வித்தாள்களை முழுமையாக செய்து பார்த்ததால் முழு மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.ஆர்.சுலைகா ரிஹானா, கிரவுன் மெட்ரிக் பள்ளி, மதுரை: ஐந்து மதிப்பெண் கேள்விகள் நன்றாக இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாவில் முழு மதிப்பெண் பெறுவது கடினம். முக்கியத்துவம் இல்லாத, எதிர்பார்க்காதகேள்விகள் கேட்கப்பட்டன.
சிந்தித்து எழுதும் வகையில் வினாக்கள் அமைந்ததால் நேரத்திற்குள் முடிப்பது சிரமமாக இருந்தது.முத்துப்பிள்ளை, தலைமையாசிரியர் வேடர் புளியகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி, மதுரை: 15 ஒரு மதிப்பெண் வினாக்களும் புத்தக்கத்தின் பின்னால் இருந்து கேட்கப்பட்டது. இரண்டு மதிப்பெண்ணில் 30வது கேள்வி எதிர்பார்க்காத கேள்வி. சிந்தித்து விடையளிப்பதாக இருந்தது. எல்லா கேள்விகளும் புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டன. ஐந்து மதிப்பெண்ணில் 45 வது வினா கட்டாய வினாவில் இதுவரை கேட்கவில்லை.கணங்கள் பாடத்தில் வெண்படத்தில் 'சரிபார்த்தல்' கேள்வி வரவில்லை. வரைபடத்தில் 47வது கேள்வியில் 'சமன்பாட்டை தீர்க்க' பகுதியில் ஆறு என்பதற்கு பதில் ஆங்கிலத்தில் 'பி' என எழுதப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கில வினாத்தாள் இரண்டிலும் தவறாக உள்ளது. இச்சமன்பாட்டை தீர்க்க முடியாது. மாணவர்களுக்கு பத்து மதிப்பெண் வழங்க வேண்டும்.நுாறு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எல்லா கேள்விகளையும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த கேள்வித்தாள் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக