லேபிள்கள்

18.8.16

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறி தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; மாநில தேர்வில் தேர்ச்சி பெறுவோர், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்.

தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.
'தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் நவ., 6ல், இந்த தேர்வு நடக்க உள்ளது; அதற்கான விண்ணப்பங்களை, இன்று முதல் சமர்ப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். 'விண்ணப்பங்களை, www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேர்வுக் கட்டணம், 50 ரூபாயுடன், ஆக., 31க்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக