லேபிள்கள்

20.8.16

ஏழு ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வில்லை : ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர் புலம்பல்.

பணியில் சேர்ந்து ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என, ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் புலம்புகின்றனர். 2009ல் ஆர்.எம்.எஸ்.ஏ.,எனப்படும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.


இத்திட்டத்தை செயல்படுத்த தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை மாநில அரசே நியமிக்க உத்தரவிடப்பட்டது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 2009ல் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கணக்கு மேலாளர்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், கட்டடப் பொறியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.


கணக்கு மேலாளர்களுக்கு ரூ.7,800, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.6,000, கட்டடப்பொறியாளர்களுக்கு ரூ.12 ஆயிரம்சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகளைக் கடந்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இவர்களைப்போல் எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும் நிலையில், தங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என, புலம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக