அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவ கவுன்சலிங் கமிட்டி வெப்சைட்டில் (www.mcc.nic.in) கல்வித்தகுதி, செல்போன் எண் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.
எல்லா தகவல்களும் கொடுக்கப்பட்டபின், தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதற்கான எம்எம்எஸ் ஒன்று மாணவர்களுக்கு அளிக்கப்படும். அதைதொடர்ந்து, மாணவர்கள் கொடுத்த தகவல்கள் சிபிஎஸ்இ கல்வி வாரியத்திடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டு பார்க்கப்படும்.
இரு தகவல்களும் சரியாக இருக்கும்பட்சத்தில், மாணவர்கள் தங்கள் தகவல்களை மீண்டும் பார்க்க அனுமதிக்கப்படுவர். மாணவர் வழங்கிய தகவல் தவறாக இருக்கும்பட்சத்தில் அந்த மாணவர்கள் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆன்லைனில் பதிவு செய்யமுடியாத மாணவர்கள், மருத்துவ கவுன்சலிங் கமிட்டி தொடர்பு மையம் அல்லது கவுன்சலிங்கில் பங்கேற்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கல்லூரிகளை ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை அணுகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக