லேபிள்கள்

27.2.17

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே இனி தேர்வு எழுதலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. இதனால், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.
அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் பிறமொழி மாணவ மாணவிகள் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக் கேட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர், பிறமொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பிறமொழி மாணவர்கள் 30 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக