லேபிள்கள்

26.2.17

கல்லூரி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் முடிவு.

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,கல்லுாரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிடப் போவதாக, அனைத்து
பல்கலை ஆசிரியர்கள் சங்கம்அறிவித்துள்ளது.
அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க, மாநில செயற்குழு கூட்டம், சங்கத் தலைவர், பசுபதி தலைமையில் சென்னையில் நடந்தது. இதில், மார்ச், 7ல், சென்னையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மீனாட்சி கல்லுாரி உட்பட பல கல்லுாரி களில் நிலவும், நீண்ட கால பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர, முத்தரப்பு பேச்சு நடத்த, கமிட்டி அமைக்க வேண்டும். 14 ஆண்டுகளாக அரசு நடத்தி வரும், ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லுாரியை, அரசு கல்லுாரியாக அறிவிக்க வேண்டும்.

பல்கலை துணைவேந்தர்கள் உரிய காலத்தில், கணக்கு தணிக்கை அறிக்கையை வெளியிட வேண்டும். அரசு கல்லுாரிகளில், ஓய்வு பெற்ற முதல்வர்களை, மீண்டும் பணி நீட்டிப்புடன் அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளதாக, அனைத்து பல்கலைஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக