லேபிள்கள்

2.3.17

ஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய தேர்தல் பிரிவினருக்கு உத்தரவு

ஜன., 5ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்தாண்டு, அக்., 17, 19ல் இரு கட்டங்களாக, உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்தது.


 இதை எதிர்த்து, தி.மு.க., தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. தற்போது, 'மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜன., 5ல் மத்திய தேர்தல் கமிஷன் வெளியிட்ட, இறுதி வாக்காளர் பட்டியலின் நகல் பெற்று, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.அடுத்த கட்டமாக, ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துதல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: புறநகர் பகுதியில், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி, நகர் பகுதியில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் தயார்படுத்தப்படும்.புதிதாக வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் என, இரண்டும் இருப்பதால், ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். வார்டு வாரியாக பட்டியல் தயாரித்து முடித்ததும், தேவையான ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக