பள்ளிக் கல்வித் துறையில் முக்கிய பிரச்னைகளை கவனிக்காமல், அமைச்சர் செங்கோட்டையன் கோட்டை விடுவதால், மாணவர் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக, பெற்றோர், ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஆறு ஆண்டுகளாக தொடரும், அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளிக் கல்வியின் ஒன்பதாவது அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றுள்ளார். பல துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அனுபவம் உள்ள செங்கோட்டையன், பள்ளிக் கல்வியில் குவிந்துள்ள பிரச்னைகளுக்கு, தீர்வு காண்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதால், பள்ளிக் கல்வியின் தரம் முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக பள்ளிகளில் வெறும் தேர்ச்சி கணக்கையும், மாணவர் எண்ணிக்கை கணக்கையும் காட்டி, எத்தனை ஆண்டுகள் சமாளிப்பது என, ஆசிரியர்களும் வருத்தத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, பெற்றோர், ஆசிரியர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், இரண்டு ஆண்டு களாக அங்கீகாரம் இன்றி, ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றிற்கு அங்கீகாரம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற வழக்கில் சிக்கிய, 741 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்தும், இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கமிட்டி, ஓராண்டுக்கு மேலாக, தலைவர் இன்றி முடங்கி உள்ளது. அதனால், தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதால், பெற்றோர், வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது ஆறு ஆண்டுகளாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' பெறுவதிலும், மருத்துவம் மற்றும் இன்ஜி., போன்ற படிப்புகளில் சேர்வதிலும், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன
நான்கு ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படும், 'டெட்' ஆசிரியர் தகுதி தேர்வில், 15 லட்சம் விண்ணப்பங்கள் பிழையாக அச்சிடப்பட்டுள்ளன. இதில், பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது
பழமையான பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றும் புதிய கோப்பு, பல ஆண்டுகளாக, கோட்டையில் கிடப்பில் உள்ளது. அதை, மீண்டும் புதுப்பிக்க, குழு அமைக்கப்படவில்லை
பல லட்சம் ஆசிரியர்களின், பென்ஷன் திட்டத்தை பாதிக்கும், பென்ஷன் நிபுணர் கமிட்டி காலாவதியாகி, இரண்டு மாதங்கள் ஆகிறது. அதை, மாற்றி அமைக்க, நடவடிக்கை இல்லை. இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளால் பள்ளிக்கல்வி திணறுகிறது. ஆனால், பள்ளிக்கல்வி அலுவலகத்தையே பார்வையிடாமல், கோட்டையிலேயே அமைச்சர் முகாமிட்டு, கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிடுகிறார். இனியாவது, அதிகாரிகளை போல், வெறும் அறிவிப்புகளை வெளியிடாமல், களத்தில் இறங்கி, ஆக்கப்பூர்வ ஆய்வுகளை துவங்குவாரா என, எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக