லேபிள்கள்

4.3.17

'நீட்' தேர்வு விவகாரம் கருத்து கேட்க முடிவு

'நீட் தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும்' என, மத்திய அமைச்சர் ஜாவடேகரிடம், முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜாவடேகர்,
நேற்று சென்னை வந்தார். முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது, முதல்வர் பழனிசாமி, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். கோரிக்கையை பரிசீலிப்பதாக, அமைச்சர் ஜாவடேகர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் ஜாவடேகர் கூறுகையில், ''மக்களிடம் கருத்து கேட்ட பின், 'நீட்' தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்,'' என்றார். 
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக