லேபிள்கள்

12.3.17

வி.ஏ.ஓ., பதவிக்கு மீண்டும் 13ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

 வி.ஏ.ஓ., பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., 2016, பிப்., 28ல், எழுத்து தேர்வை நடத்தியது. இதில், தேர்வானவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, காலியிடங்கள் நிரப்பப்பட்டன.
இன்னும், காலியாக உள்ள, 147 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 13 முதல், 15 வரை நடக்க உள்ளது. இதற்கான பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர தவறினால், பட்டியலில் உள்ளோருக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக