லேபிள்கள்

16.3.17

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கூடுதல் அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, இந்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதியில் இருந்து, 2 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைப்படி, ஒரு ஆண்டுக்கான நுகர்வோர் விற்பனை குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்.அதன்படி, ஏற்கனவே, 2 சதவீத உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதியில் இருந்து, கூடுதலாக, 2 சதவீத அகவிலைப்படி அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர், 55.51 லட்சம் ஓய்வூதியர் பயன் பெறுவர்.இதற்கிடையே, தனியார் பங்களிப்புடன் துவக்கப்படும், ஐ.ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தகவல் தொழில்நுட்ப மையங்கள் 
பட்டங்கள் அளிப்பதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும், தனியார் பங்களிப்புடன், 20 மையங்கள் துவக்க திட்டமிடப்பட்டு, தமிழகத்தின் ஸ்ரீரங்கம் உட்பட, 15 இடங்களில் 
ஏற்கனவே இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக