லேபிள்கள்

14.3.17

கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவரா?

அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த, 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் அறிமுகமானது. 


அப்போது, கணினி இயக்கத் தெரிந்த, 'டிப்ளமோ' பட்டம் பெற்றவர்கள், கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி அறிவியல் படித்த, மற்ற பாட ஆசிரியர்கள், வகுப்பு எடுக்க உத்தரவிடப்பட்டது. அதனால், 1992ல் பணியில் சேர்ந்தவர்கள், 2008ல் நீக்கப்பட்டனர்; அவர்கள், நீதிமன்றத்திற்கு சென்றனர். அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும், சிறப்புத் தேர்வு நடத்தி, 1,652 பேர் பணியில் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணியிடம், 'சார் நிலை பணியாளர்' என, அறிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் துணை அமைப்பாளர் முத்து வடிவேல் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளாக, கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. ஆசிரியராக சேரலாம் என, பி.எட்., முடித்த, 40 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மற்ற பாடங்களைப்போல, கணினி அறிவியலுக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை பட்டம் முடித்தவர்களை, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக