அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், மார்ச் 2ல், பிளஸ் 2; மார்ச் 8ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இரு தேர்வுகளிலும், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்க உள்ளது. ஏப்., 15க்குள் விடை திருத்தங்களை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. பல ஆசிரியர்கள் விடை திருத்தத்தில் இருந்து தப்பிக்க, மருத்துவ விடுப்பு, காது குத்து, கல்யாணம் என, பல சாக்கு போக்குகளை சொல்லி, விடுப்பு கேட்பதாக புகார் எழுந்துள்ளது.அதனால், அனைத்து அரசு பள்ளிகளிலும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஏப்., 15 வரை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், இதற்கான உத்தரவு, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக