லேபிள்கள்

27.8.17

செப்., 7 முதல், 'ஸ்டிரைக்' அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளது.
அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்ரமணியன், மதுரையில் அளித்த பேட்டி:

மறைந்த ஜெயலலிதா அறிவித்தபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; புதிய சம்பள விகிதம் வழங்க வேண்டும். அதற்கு முன், இடைக்கால நிவாரணம், 20 சதவீதம் வழங்க 
வேண்டும்.இதை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை. ஆட்சியை தக்க வைத்து கொள்வதிலேயே, அரசு கவனம் செலுத்துகிறது.

செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும். மறியல்,காத்திருப்பு, சிறை 
நிரப்பும் போராட்டங்கள் நடத்தப்படும். மாநிலத்தில், 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இந்த போராட்டங்களில் ஈடுபடுவர். எனவே மக்கள் நலன் கருதி ஊழியர், ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் பேசி, பிரச்னைகளுக்கு, அரசு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக