மூன்று மாவட்டங்களில் செயல்படாமல் உள்ள, 360 சங்கங்களின் பெயர்களை, சங்கப் பதிவேட்டில் இருந்து நீக்க,
பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. விழுப்புரத்தில், 335; சேலத்தில், 24; கரூர் மாவட்டத்தில் ஒன்று என, மொத்தம், 360 சங்கங்கள், முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மூன்று ஆண்டுகளாக, இந்த சங்கங்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது குறித்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மூன்று மாதங்களுக்குள், உரிய விளக்கம் அல்லது ஆண்டறிக்கை கிடைக்காவிட்டால் அவற்றின் பெயர்கள், சங்கப் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் என, மாவட்டப் பதிவாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த விபரம், தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக