இன்ஜி., கல்லுாரிகளின், 'கேம்பஸ்' வேலைவாய்ப்பு முகாமில், இரட்டை பணி வாய்ப்பு முறை, அதிரடியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இன்ஜி., கல்லுாரிகளில்,
இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, இறுதி பருவத் தேர்வுக்கு முன், 'கேம்பஸ்' எனப்படும், வளாக நேர்முகத் தேர்வு நடக்கும். இதில், முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, மாணவர்களிடம் தேர்வு நடத்தி, வேலைவாய்ப்புக்கான உத்தரவை வழங்குவர். பணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மாணவர், இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, முன்னிலை மதிப்பெண் பெற்றால் மட்டுமே, வேலையில் சேர முடியும்.
இந்த முகாமில், திறமையான மாணவர்களுக்கு, இரு நிறுவனங்களிடம் தனித்தனியே வேலை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இரண்டு வாய்ப்புகளை பெறும் மாணவர், படிப்பு முடிந்ததும், தான் விரும்பிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்துவிட்டு, மற்றொன்றை ரத்து செய்து விடலாம்.
இந்நிலையில், 'டூயல் ஆபர்' என்ற, இந்த இரட்டை வேலைவாய்ப்பு முறையை, இந்த ஆண்டு முதல், அண்ணா பல்கலை உள்ளிட்ட, இன்ஜி., கல்லுாரிகளும், பல சுயநிதி பல்கலைகளும் ரத்து
செய்துள்ளன.
அதனால், இந்த ஆண்டு கேம்பஸ் தேர்வில், மாணவர்களுக்கு ஒரே ஒரு வேலைவாய்ப்பு உத்தரவு மட்டுமே கிடைக்கும்.
இது குறித்து, இன்ஜி., கல்லுாரி நிர்வாகத்தினர்
கூறியதாவது:
இரட்டை ஒப்பந்த முறைப்படி, திறமையான மாணவர்கள், எந்த நிறுவனத்தில் சேர வேண்டும்; எவ்வளவு சம்பளத்தில் பணியில் சேர வேண்டும் என, தேர்வு செய்து கொள்ளலாம். வேலையில் சேரும் போது, ஏதாவது ஒரு நிறுவன உத்தரவை ரத்து செய்வர்.
அதனால், பணி ஆணை ரத்தாகும் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதுடன், அந்த இடத்தை நிரப்ப, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீண்டும், நேர்முகத் தேர்வு
நடத்தி, ஆட்களை தேர்வு வேண்டும்.
அப்போது, ஏற்கனவே தேர்வு நடத்திய கல்லுாரிக்கு, அந்நிறுவனம் மீண்டும் வருமா என்பது சந்தேகம். எனவே, இரட்டை ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட்டால், முதற்கட்ட நேர்முகத் தேர்விலேயே, அதிக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் நிறுவனங்களும், ஒப்பந்தப்படி ஊழியர்களை பணியில் சேர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக