காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் செப்.,4ல் அரசு பேச்சு நடத்த உள்ளது.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஜூலை 18ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டையை நோக்கி ஆக., 5ல் பேரணி நடத்தினர். ஆக., 22 ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இன்னும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படாததால் செப்., 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அரசு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறுகையில், ''அரசு தரப்பில் செப்., 4 மதியம் 12:30 மணிக்கு, பேச்சு நடத்த வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் பங்கேற்கின்றனர்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக