ஆசிரியர்கள், செப்., ௭ முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் சார்பில், தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது; பழைய, 'பென்ஷன்' திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மாத ஊதியத்தை உயர்த்துவது என, பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், கோட்டை நோக்கி பேரணி மற்றும் வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்கள் நடந்தன. ஆனாலும், அரசு பேச்சு நடத்தாததால், வரும், ௭ முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு பள்ளி ஆசிரியர்களில், பெரும்பாலானோர் பள்ளிக்கு வர வாய்ப்பில்லை என்பதால், பள்ளிகள் திறந்திருந்தாலும், வகுப்புகள் நடக்காது.
இந்நிலையில், வரும், 11 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, காலாண்டு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன், ஆசிரியர்கள் போராட்டம் துவங்கு வதால், தேர்வுக்கான பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியாத நிலை உள்ளது. போராட்டம், 11ம் தேதிக்கு பின்னும் நீடித்தால், காலாண்டு தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே, தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக