வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை, டிச., 31 வரை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.
வருமான வரித் துறை வழங்கும், 'பான்' கார்டு பெறுவதற்கு, ஜூலை, 1 முதல் ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டது.ஏற்கனவே பான் கார்டு பெற்றுள்ளவர்களும், அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தவிர, 2016 - 17ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை, 31 கடைசி தேதி.
'ஆதார் இல்லாதவர்கள், வருமான வரி கணக்கைதாக்கல் செய்யலாம். அதில், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்ததற்கான அத்தாட்சி எண்ணை குறிப்பிட்டால் போதும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தஅவகாசம், ஆக., 5 வரை நீட்டிக்கப்பட்டது.
பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டு,நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற் கான காலக்கெடு, இந்தாண்டு, டிச., 31 வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு நேற்றுஅறிவித்தது.
பல்வேறு திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் காலக்கெடு ஏற்கனவே, டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது; தற்போது, பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கில், 'தனிநபர் சுதந்திரம், அடிப்படை உரிமையே' என, உச்ச நீதிமன்றத்தின்,ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக