லேபிள்கள்

4.10.17

பள்ளி மாணவர்களுக்கு "தொடுவானம்" திட்டம் 16ம் தேதி தொடக்கம்

அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சித் திட்டத்துக்கு ‘தொடுவானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி திட்டம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள்
அனைத்தையும் தமிழக பள்ளி மாணவர்கள் எதிர் கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் வேகமாக நடக்கிறது. முதற்கட்டமாக 250 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

இவற்றின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது. இதற்கு ‘தொடுவானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக