லேபிள்கள்

2.10.17

இடைக்கால நிவாரணம் மறுப்பு : அரசு பஸ் ஊழியர்கள் கொதிப்பு

அரசு அறிவித்த இடைக்கால நிவாரணம், புதிய பஸ் ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதால், அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. 13வது ஊதிய ஒப்பந்தம், ஓராண்டாக நிறைவேற்றப்படவில்லை. இதனால், தொழிற்சங்கத்தினர், 'ஸ்டிரைக்' அறிவித்தனர். அவர்களுடன் பேச்சு நடத்திய, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'புதிய ஊதிய ஒப்பந்தம் 

நிறைவேற்றப்படும் வரை, மாதம், 1,200 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும். பண்டிகை காலம் என்பதால், ஸ்டிரைக்கை கைவிடுங்கள்' என, கோரிக்கை விடுத்தார். இதை, தொழிற்சங்கங்கள் ஏற்றன.
இந்நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, செப்., மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதில், செப்டம்பரில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட, 5,000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்துள்ள ஊழியர்கள், 'இடைக்கால நிவாரணம் வழங்கா விட்டால், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்' என, தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக