லேபிள்கள்

5.10.17

9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கற்றல் முன்னறிவு தேர்வு : மெல்ல கற்போருக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் முன்னறிவு தேர்வு, இன்று நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, திறன் மிக்கவர்களாக உருவாக்க,
கல்வித் துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதற்காக, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், சிறப்பு பாட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், இன்று, கற்றல் முன் அறிவு தேர்வு நடத்தப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் இது செயல்படுத்தப்படுகிறது. கணிதம், அறிவியல், ஆங்கிலம் பாடங்களில் இத்தேர்வு நடைபெறும். இதற்கென சிறப்பு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், 15 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்ற மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்குப் பின், மீண்டும் அடைவு தேர்வு நடத்தப்படும். இதன் மூலம், மெல்ல கற்கும் மாணவர்களை, பயிற்சிக்குப் பின், சக மாணவர்களுடன் இணைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். இத்தேர்விற்கான வினாத்தாள் கட்டுகள், நேற்று, தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கல்வி துறையின் இந்த நடவடிக்கையால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக