லேபிள்கள்

3.10.17

வேலைநிறுத்த உரிமைக்கு தடையாக இருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்: டெல்லியில் நாளை தொழிற்சங்கங்கள் முக்கிய முடிவு !!

வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு தடை விதிப்பதற்கு உயர் நீதிமன்றங்கள் மேற்கோள் காட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது . இந்த உத்தரவால் காலவரையற்ற வேலைநிறுத்தம் 2 
நாளில் முடிவுக்கு வந்தது.இதேபோல் செப்டம்பரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

வேலைநிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பையே வழிகாட்டுதலாக கொண்டு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்தன.

*டி.கே.ரங்கராஜன் வழக்கு*

தமிழகத்தில் 2003-ம் ஆண்டில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது ஒரே நாளில் சுமார் 1.5 லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அரசு ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய உரிமையில்லை’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இக்கருத்தின் அடிப்படையிலேயே வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றங்கள் மறுத்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பெரும் தடையாக இருந்து வரும் உச்ச நீதிமன்ற உத்தரவை சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

அகில இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் டெல்லியில் நாளை (அக்.4) நடைபெறுகிறது.

இதில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாநில அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் எஸ்.சம்பத் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டம், தொழில் தாவாச் சட்டம், தொழிற்சங்க சட்டம் அளித்துள்ள குறைந்தபட்ச போராடும் உரிமையை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதே சரி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக