நாடு முழுவதும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிகளை உருவாக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளது.
ஹரியானாவில் உள்ள, ரையான் சர்வதேச தனியார் பள்ளியில், பள்ளி வேன் உதவியாளர் ஒருவன், 7 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து, கொலை செய்தான். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியது. நாடு முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்புக்கு உரிய கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த விதிகள் வகுக்கப்பட உள்ளன.
இந்த ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க, சி.பி.எஸ்.இ., சார்பில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 'இந்த கமிட்டியினர், உரிய நிபுணர்களுடன் ஆலோசித்து, மாணவர் பாதுகாப்பு விதிகளை ஏற்படுத்துவர். அந்த விதிகள் விரைவில் அறிவிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகார பிரிவு துணை செயலர், ஜெய்பிரகாஷ் சதுர்வேதி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக