லேபிள்கள்

4.10.17

ஜாக்டோ -ஜியோ சார்பில் அக்.8ல் விளக்க கூட்டம்

 ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு முடிவின்படி அக்.8ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்படுகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான 'ஜாக்டோ- ஜியோ' சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 ம்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் 
நடந்தது. மாநிலம் முழுவதும் பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தது.இதற்கிடையே நீதிமன்றம் தலையிட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு அனைவரும் வேலைக்கு திரும்பினர். தமிழக அரசின் தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி சில உறுதிமொழிகளை வழங்கினார். தொடர்ந்து ஜாக்டோ - ஜியோ கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏழாவது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தும், இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவின்படி அக்.13ம் தேதி ஊதிய மாற்றம் குறித்து அறிவிக்க 
வேண்டும் என, ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அக்.8ல் விளக்க கூட்டம்இந்நிலையில் ஜாக்டோ -ஜியோ வேலை நிறுத்தமும், நீதிமன்ற நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் அக்.8ம் தேதி விளக்க கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 32 மாவட்டங்களிலும் யார், யார் பங்கேற்பது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளனர். ஒரு அரசு ஊழியர், இரண்டு ஆசிரியர்கள் வீதம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்த உள்ளனர். இதில், வேலைநிறுத்தம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என, தமிழ்நாடு பட்டதாரி 
ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரைமண்ட் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக