லேபிள்கள்

14.5.18

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெறுவதற்கான வரையறையில் மாற்றம்

கடந்த, 2017 - 18 கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெறுவதற்கான வரையறைகளில் சில மாற்றங்களை, சி.பி.எஸ்.இ., செய்துள்ளது.

மதிப்பெண் : சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 5 முதல், ஏப்., 4 வரை தேர்வுகள் நடத்தியது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 5 முதல், ஏப்., 13 வரை தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்நிலையில், பிப்ரவரியில், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிக்கையில், 2017 - 18ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சிக்கான வரையறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த மாணவர்களுக்கு, உள்மதிப்பீட்டு மதிப்பெண், 20, வாரிய தேர்வு மதிப்பெண், 80 என, இரண்டும் சேர்த்து, 100 மதிப்பெண் வழங்கப்படும் பாடங்களில், கட்டாய தனி தேர்ச்சி வரையறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மாணவர்கள், இரண்டிலும் சேர்த்து, 33 சதவீத மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவார்.கடந்த, 2017 - 18ம் கல்வி யாண்டில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், பலதரப்பட்ட மதிப்பீட்டு பின்புலங்களில் இருந்து வந்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.தனி தேர்ச்சி

கடந்த, 2017, ஜன., 31ல், வெளியிடப்பட்ட இணைப்பு - 1ல் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில், கட்டாய தனி தேர்ச்சி வரையறை தொடரும் என்றும், சி.பி.எஸ்.இ, கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக