லேபிள்கள்

15.5.18

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளியை எப்படி நிர்வகிக்க வேண்டுமென 24 பக்க கையேட்டை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
அதில், குறிப்பாக ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. இவற்றில் குறிப்பாக ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. ஆசிரியர்கள் 10 நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தால், வழங்கப்படும் ‘கிரேஸ் டைம்’ இனிமேல் வழங்கப்பட மாட்டாது.

ஆசிரியைகள் வெள்ளிக்கிழமைகளில் 1 மணி நேரம் கால தாமதமாக வர இனிமேல் அனுமதியில்லை. தற்செயல் விடுப்பு ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். அரைநாள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பிற்பகல் பள்ளி துவங்கும்போது பணிக்கு வந்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக