லேபிள்கள்

14.5.18

அஞ்சல் ஊழியர்கள் வரும் 22ல், 'ஸ்டிரைக்'

கிராமிய அஞ்சல் ஊழியர்கள், மே, 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க, மாநில பொருளாளர் விஷ்ணுதேவன்
அறிக்கை:இந்தியாவில், 1.26 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள், கிராமங்களில் இயங்கி வருகின்றன. இதில், 2.49 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அஞ்சல் துறை வருவாயில், 73 சதவீதம், கிராமிய அஞ்சல் அலுவலகங்கள் மூலம் கிடைக்கிறது. கிராமிய அஞ்சல் ஊழியர்கள், பிரிட்டிஷ் காலம் முதல் தற்போது வரை, பகுதி நேர பணியாளர்களாக உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏழாவது ஊதிய குழுவில், கமலேஷ் சந்திரா தலைமையிலான கமிட்டி பரிந்துரையில், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை. அவற்றை உடனடியாக அமல்படுத்த கோரிக்கையை வலியுறுத்தி, மே, 22 முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்குகிறோம். இதனால், அஞ்சல் துறை பணிகள் முற்றிலும் பாதிக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக