''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருப்போரூர் ஒன்றியம், தாழம்பூரில் உள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று நடைபெற்றது.விழாவில், பங்கேற்ற, அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:அண்ணா பல்கலைக்கழக, 'ஆன்லைன்' கலந்தாய்வு முறைக்கு மாணவர்கள் மற்றும் பிற தரப்பினரிடையே வேண்டாம் என்ற கருத்து நிலவுகிறது. இதுகுறித்து, உயர் கல்வி துறை அமைச்சரிடம் பேசி, பரிசீலனை செய்யப்படும்.தமிழகத்தில், வரும் காலத்தில், பிளஸ் 2 படித்தாலே வேலை வாய்ப்பு கிடைத்துவிடும். அந்தளவிற்கு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். மேலும், மூன்று லட்சம் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மேலை நாடுகளுடன் இணைந்து அரசு சார்பாக மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச வகுப்புகள் நடத்தப்படும்.பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளன.மேலும், தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, மூன்று லட்சம் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கவும், 3,000 பள்ளி மாணவ - மாணவியருக்கு, 'ஸ்மார்ட்' பயிற்சி வகுப்புகள் துவங்கவும், அரசு சார்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக