வரவு, செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாத, 578 சங்கங்களை கலைத்து, பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொது நலன், தொழில் மேம்பாடு, கல்வி - கலாசார
மேம்பாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக, சங்கங்கள் ஏற்படுத்தப்படுகின்றன; சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவை செயல்பட வேண்டும். இச்சங்கங்கள் ஆண்டுதோறும், பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.கணக்குகளை தாக்கல் செய்யாத சங்கங்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, சங்கங்களின் பதிவாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவுத்துறை அதிகாரிகள், ஆண்டு வாரியாக, பதிவை புதுப்பிக்காத சங்கங்கள் குறித்து, ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில், 1993ல் துவங்கப்பட்டு, பதிவை புதுப்பிக்காத, 578 சங்கங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கங்கள் கலைக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 588 சங்கங்கள், மூன்று மாதங்களுக்கு பதிவை புதுப்பிக்க கெடு விதித்து, பதிவுத்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக