லேபிள்கள்

4.6.18

'1 மற்றும் 2ம் வகுப்புக்கு வீட்டுப்பாடம் இல்லை' விலக்கு அளிக்கும் மசோதா, பார்லி.,யில் தாக்கல்

''முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டுப் பாடத்தில் 
இருந்து விலக்கு அளிக்கும் மசோதா, பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும்,'' 
என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்
 தெரிவித்தார்.

'முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகள், பளு துாக்கும் 

வீரர்கள் அல்ல. 'எனவே, அவர்கள் சுமக்கும் புத்தகப் பை, அவர்களின் 
எடையில், 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அவர்களுக்கு தினசரி 
வீட்டுப் பாடம் தரக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம், சமீபத்தில் 
உத்தரவிட்டது.இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை 
அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர்
 செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னை உயர் நீதிமன்றத்தின் 
உத்தரவை வரவேற்கிறேன்; அதை நடைமுறைப்படுத்த தேவையான 
நிச்சயம் எடுக்கப்படும். கல்வி கற்றல் என்பது மகிழ்ச்சியான அனுபவமாக
 இருக்க வேண்டும்; அது, குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை தரக் கூடாது
.முதல், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டுப் பாடத்தில் இருந்து 
விலக்கு அளிக்கும் மசோதா, வரும், மழைக்கால கூட்டத் தொடரின்போது,
 பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும்
.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக