திருக்கனுார் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளியில் இடவசதி இல்லாததால், மாணவிகள் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.திருக்கனுார் பள்ளி வாசல் அருகே வக்பு போர்டுக்கு சொந்தமான இடத்தில்,
சி.பி.எஸ்.சி., அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், எல்.கே.ஜி., யு.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை200க்கும் மேற்பட்ட மாணவிகள்பயின்று வருகின்றனர்.ஆனால், இப்பள்ளி கட்டடத்தில் 5 வகுப்பறைகள் மட்டுமே அமைந்துள்ளதால், ஒவ்வொரு வகுப்பறையிலும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வகுப்பறைகள் இல்லாததால், 1ம் வகுப்பு மாணவிகள்,பள்ளி வளாகத்தில் சிமென்ட் ஓடு அமைக்கப்பட்ட இடத்தில், தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
பள்ளியில் போதிய இட வசதி இல்லையென அரசுக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், இந்தாண்டு இப்பள்ளியில் மாணவிகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம், பள்ளியில் போதிய இடவசதி இல்லை என கூறிதிருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆகையால், கல்வித்துறைஅருகில் உள்ள இடத்தில், கூடுதல் வகுப்பறைகளை அமைத்தால், அதிக மாணவிகளை சேர்த்துக் கொள்ள இயலும்.
திருக்கனுார் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி வக்பு போர்டுக்கு சொந்தமான இடம் என்பதால், பள்ளியை சீரமைக்கவும், கூடுதல் வகுப்பறை அமைக்கவும் அரசு, வக்பு போர்டில் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். எனவே, அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க, பெற்றோர் முன்வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்வித்துறை, அதற்கான அடிப்படை வசதிகளையும் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், இந்த கல்வியாண்டிலேயே அரசு, உடனடியாக வக்பு போர்ட்டில் பேசி திருக்கனுார் அரசு பெண்கள் தொடக்க பள்ளியில் அடிப்டை வசதிகளை ஏற்படுத்தவும், கூடுதல் வகுப்பறைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக