குரூப்-1 மெயின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத் தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
இத்தேர்வை 4,801 பேர் எழுதினர். தேர்வு முடிந்து 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதேபோல், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 9,351 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி நடந்தது. இத்தேர்வை 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வின் முடிவும் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் நிலுவையில் உள்ள தேர்வுகளின் முடிவுகள் தோராயமாக எப்போது வெளியிடப்படும்? என்ற உத்தேச காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், குரூப்-1 மெயின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்றும், ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜூலை கடைசி வாரத்தில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா அதிகாரி, ஆட்டோமொபைல் இன்ஜினீயர், குரூப்-2ஏ தேர்வு உட்பட இதர போட்டித்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் உத்தேச நாள் விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக தேர் வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக