லேபிள்கள்

4.6.18

கல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல்

பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களில்
அலுவலர்கள் மட்டுமே அடிக்கடி மாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு கீழே பணிபுரியும் சிலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். அவர்கள் ஆசிரியர்கள் இடமாறுதல், பணப்பலன் வழங்குதல், நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது.இதனை தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், பள்ளி துணை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இருக்கைப் பணி கண்காணிப்பாளர், உதவியாளர், இளைநிலை உதவியாளர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.
இதற்கான பணியை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருவதால், பணியாளர்கள் கலக்கமடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக